வீடு தேடி சென்று ஓபிஎஸ் இடம் ஆசி பெற்ற ஈபிஎஸ்!!
சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க கூட்டத்தை நடத்தியது. அதில் பல பிரச்னை, இழுப்பறிக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஆத்திரமான ஓ. பன்னீர்செல்வம் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்நிலையில் கோபத்தில் சென்ற ஓ பன்னீர் செல்வம் வீட்டுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற எடப்பாடி பழனிசாமி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீருக்கு சால்வைப் போட்டு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி நன்றி சொன்னார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments