முருங்கை கீரையில் இருக்கும் சத்து தெரியாத மக்கள். உணவில் சேர்த்து பயன் படுவோம்..!!
கோரோனா என்னும் கொடிய நோய் தாக்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உணவை மருந்தாக உட்கொள்ளும் மனிதர்களை இங்கே வாழ்வர். நோயிலிருந்து எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்புத்திறனில் முருங்கைக்கே முதலிடம்.
பத்து ரூபாய்க்குக் கிடைக்கும் முருங்கைகீரை அல்லது முருங்கைக்காயை வாரம் மூன்று முறை உட்கொண்டால் போதும்,
நமது நோய் எதிர்ப்புத்திறன் பல மடங்கு உயர்ந்துவிடும். முருங்கையிலுள்ள வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட 7 மடங்கு அதிகம், முருங்கையிலுள்ள வைட்டமின் A ஆனது கேரட்டில் உள்ளதைவிட 4 மடங்கு அதிகம், முருங்கையிலுள்ள வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம்.
முருங்கையிலுள்ள வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதைவிட 50 மடங்கு அதிகம். முருங்கையிலுள்ள கால்சியம் சத்து பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிகம், முருங்கையிலுள்ள புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதைவிட 2 மடங்கு அதிகம்.
முருங்கையிலுள்ள மெக்னீஷியம் சத்து முட்டையில் உள்ளதைவிட 36 மடங்கு அதிகம். முருங்கையிலுள்ள இரும்புச் சத்து மற்ற கீரைகளில் உள்ளதைவிடத் தோராயமாக 25 மடங்கு அதிகம். முருங்கையிலுள்ள பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிகம்.
முருங்கை உண்ட கிழவன்கூட கைத்தடி இன்றி நெஞ்சை நிமிர்த்தி வெறும் கையோடுதான் நடப்பான் என்பதை 'முருங்கையை நட்டவன் வெறுங்கையோடுதான் போவான்' என்னும் பழமொழி உணர்த்தும். எனவே, முருங்கையை உண்டு என்றென்றும் இளமையுடன் வாழ்வோம்.முருங்கைக்கீரையைக் கடைந்தோ, குழம்பு வைத்தோ, சூப் செய்தோ, சுண்டியோ, பொரியல் செய்தோ, சப்பாத்தி , கேழ்வரகு அடைகளில் சேர்த்தோ, முருங்கைப்பொடியைச் சோற்றில் கலந்தோ சாப்பிடலாம்.
முருங்கைக்காய்களைக் குழம்பு, சாம்பார், பொரியல், பொரித்த குழம்பு, காரக்குழம்பு வைத்துச் சாப்பிடலாம். முருங்கைக்காயின் உள்ளே உள்ள சதைப்பகுதியை எடுத்து பருப்புடன் சேர்த்தரைத்து மசால் வடை செய்தும் சாப்படலாம்.
இது போன்ற சத்துள்ள கீரை வகைகளை சாப்பிட்டு மனிதன் நல்வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டும் என்று முன்னோர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-தலைமை நிருபர் ஈசா, அனஸ்.
Comments