கோவையில் கொரோனா தடுப்பு உதவி மையம் !!
இந்த உதவி மையத்தின் மூலம் அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்கள், நோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மையங்கள் குறித்த விபரம், மருத்துவ ஆலோசனைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான தொலை தொடர்பு வழி ஆலோசனை, வாகன உதவி, மற்றும் ரத்த தானம் செய்வது குறித்த விபரங்கள், ஆகிய உதவிகள் செய்திட ஏற்பாடுகள் உள்ளது.
பல்துறை சார்ந்த நண்பர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், மாற்று மருத்துவ நிபுணர்கள், உள்ளிட்டு கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை தேர்வு செய்து இந்த உதவி மையம் Left Help center for Covid-19 என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு மைய முகவரி:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),
138, 2 வது வீதி விரிவாக்கம், காந்திபுரம், 100 அடி ரோடு,
கோவை-12.
தொடர்புக்கு : 94438 84053. 94887 08832.
86800 91826. 99941 58832. 81898 02073.
-ஆர்.கே.பூபதி.
Comments