ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடற்கரை அருகே மனித எலும்புகள் அதிர்ச்சியில் மக்கள்..!!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடற்கரை கிராமம் தான் வாலிநோக்கம். இங்கு ஏராளமான மீனவர்களும், மீன்பிடி சார்ந்த மற்ற தொழில் ஈடுபடுபவர்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக யாரும் மீன்பிடி தொழிலாளர்கள் கடலுக்குள் செல்ல வில்லை.
அந்த கடற்கரையில் ஒரு இடத்தில் மணல் மேடு இருந்தது. புயலால் உருவான காற்றில் அந்த மணல் மேடு சற்று கரைந்து போய் இருந்தது. மீனவர்கள் அந்த வழியாக சென்ற போது அந்த மணல் மேடு பகுதியில் மனித எலும்புகள் வெளியே தெரிந்தன. இதனால் அதிர்ச்சி அப்பகுதியை சேர்ந்தவர்கள் வாலிநோக்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாஸ், வாலிநோக்கம்
சப்-இன்ஸ்பெக்டர், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி மற்றும் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு விசாரனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் முன்னிலையில் அங்கு தோண்டிய போது 5 க்கும் மேற்பட்டவர்களுடைய எலும்புகள் என தெரியவந்தது. அதில் மண்டை ஓட்டுடன் சிதைந்து போன நிலையில் கிட்டத்தட்ட முழு வடிவமாகவும் ஒரு எலும்புக்கூடு இருந்தது.
இதனை போலிசார் எடுக்கப்பட்ட எலும்புகள் தடயவியல் ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பபட்டு உள்ளது. அந்த எலும்புகள் புதைக்க பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், எலும்புகள் சிதைந்த நிலையில் உள்ளன. அவர்கள் எங்காவது கொலை செய்யப்பட்டு இங்கு வந்து புதைக்க பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரனை நடத்தி வருகிறோம்.
இது குறித்து ராமநாதபுரம் தடயவியல் துறை அலுவலர் மினித்தா கூறுகையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் எந்த ஆண்டை சேர்ந்தவை என்பதை துல்லியமாக அறிய ஆய்வுக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். என்றார். இந்த சம்பவம் சாயல்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளை வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன், தூத்துக்குடி. ஈசா.
Comments