வால்பாறையில் மயங்கி விழுந்த முதியவர்.! உதவியவர்களுக்கு குவியும் பாராட்டு..!!
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்றைய தினம் முதியவர் ஒருவர் கடைவீதி நடைபாதையில் நடந்து சென்று கொண்டுஇருந்தார். அப்பொழுது அவருக்கு தலை சுற்று ஏற்பட்டு கீழே விழுந்தார். பொது ஊரடங்கு அறிவிப்பால் அதிக நடமாட்டம் உள்ள இந்தப் பகுதிகளில் நேற்று ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. எனவே கீழே விழுந்த இந்த நபரை பார்த்த சிலரும் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
சிறிது நேரம் கழித்து அவ்வழியில் வால்பாறை நடுநிலை எஸ்டேட் சேர்ந்த விஷ்ணு, என்ற வழக்கறிஞர் மற்றும் நாளைய வரலாறு புலனாய்வுலனாய்வு இதழ் பத்திரிக்கை நிருபர் திவ்ய குமார், இருவரும் கீழே விழுந்து கிடந்த அந்த நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அருகில் சென்று அந்த நபரை தட்டி எழுப்பி தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். கோரோனா நோய்த் தொற்று பரவும் இந்த காலகட்டத்தில் உதவிக்கு யாரும் வரமுடியாத நிலையில் இந்த இருவரின் செயல் மிகவும் சிறப்பு என்றும் இதுபோன்ற நல் உள்ளங்களை அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்ய குமார். ஈசா.
Comments