மண்ணை ஆளும் மன்னார்குடி நாயகன் மூன்றாவது முறையாக வெற்றி..!!
இந்த முறை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக இங்கு டிஆர்பி ராஜா (திமுக), சிவா ராஜமாணிக்கம் (அதிமுக), அன்பானந்தம் (மநீம), இரா அரவிந்தன் (நாதக), எஸ். காமராஜ் (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள். கடந்த 2016ஆம் தேர்தலில் 76.94% வாக்கு சதவிகிதம் பதிவாகி இருந்தது. 2016ல், திமுக வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜா, அகில இந்திய அண்ணா திமுக வேட்பாளர் காமராஜ் அவர்களை 9937 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார்.
இந்த தொகுதி தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டது, 2019 நடந்த பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் இங்கே வெற்றிபெற்றது.
தற்பொழுது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் 2021 மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் திமுக வேட்பாளருமான திரு.டி.ஆர்.பி. ராஜா அவர்கள்.
கடந்த இரண்டு முறை பத்தாண்டுகளாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தும் மாநிலத்தில் தலைமையில் திமுக ஆட்சி இல்லாததனால் தனது கனவு திட்டமான மின்னும் மண்ணை என்பதை செயல்படுத்துவதற்கு பல்வேறு இடையூறுகளை சந்தித்ததாகவும் ஆனால் இந்த முறை மண்ணை கண்டிப்பாக மின்னும் என்ற உத்தரவாதத்தை கொடுத்து மக்களிடத்தில் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.இவரின் இந்த வெற்றியை மன்னார்குடி சட்டமன்ற தொகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது 2 முறை வெற்றி பெற்றது என்றாலும் தற்போது மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற ஆளுங்கட்சி என்பதனாலும் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திருமலைக்குமார், ரைட் ரபீக்.
Comments
எங்கள் பாசமிகு அண்ணன்*
*திரு சு.ரவி BABL.MLA*
*அவர்கள் முன்றாவது* *
முறையாக வெற்றி*
*பெற்று சாதனை* *படைத்து உள்ளார் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்* 🌱✌️💐
#TNElection2021 #TnElectionResult