வால்பாறை முடீஸ் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பு!!

     -MMH
     கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று  வேகமாக பரவி வருகிறது.

இப்பகுதியில் உள்ள BBTC குரூப் ஆபீஸில் மொத்தம் நான்கு பேருக்கும் மேலும்  வொர்க் ஷாப் பகுதி பணிமனையில் மூன்று பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பணிமனையில் வேலை செய்த நபர்களை தனிமைப் படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை, திருப்பூர்  உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் நபர்களையும் அவர்களது குடும்பத்தினரையும்  7 நாட்கள் தனிமைப்படுத்தி வருகின்றனர். எனவே மூடீஸ் பகுதி பொதுமக்கள்  கடைகளுக்கு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லும்  அனைவரும் சமூக இடைவெளி கடைப்பிடித்து  முக கவசம் அணிந்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும்படி செல்லுமாறு இப்பகுதியிலுள்ள  சமூக ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு  கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-செந்தில்குமார், மூடீஸ்.

Comments