சிங்கப்பூரில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி வந்த இளைஞர்..!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மணல்மேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 36). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் பக்கவாத நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருந்து தனியார் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று (28/05/2021) திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
நான்கு மணி நேர பயணத்திற்கு பின், ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட அவர், திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமணனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஆம்புலன்ஸ் தரையிறங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாளையவரலாறு செய்திகளுக்காக
-பார்த்திபன், ரைட் ரஃபிக்.
Comments