சிங்கம்புணரியில் விதிகளை மீறிய தனியார் நிதி நிறுவனங்கள் சீல் வைப்பு! வட்டாட்சியர் அதிரடி!

 

-MMH

       சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கொரோனா ஊரடங்கின்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் குறிப்பிட்ட நேரத்தில் தங்களது வியாபாரத்தை முடித்துக் கொள்கின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அரசின் அறிவிப்பை உதாசீனப்படுத்தி, சிங்கம்புணரியில் உள்ள இரண்டு முத்தூட் பைனான்ஸ் நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக நேற்று சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் சாலை மற்றும் பெரிய கடைவீதியில் உள்ள இரண்டு முத்தூட் பைனான்ஸ் நிறுவன கிளைகளிலும் வட்டாட்சியர் அதிரடியாக ஆய்வு செய்தார். இரண்டு கிளைகளிலும் வர்த்தகம் தடையின்றி நடைபெறுவது தெரியவந்தது. எனவே அவற்றை உடனடியாக மூடி சீல் வைக்க வட்டாட்சியர் உத்தரவிட்டார். மேலும் இரண்டு கிளைகளுக்கும் தலா ₹.5,000 அபராதமும் விதித்தார். இந்த ஆய்வின் போது சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கதிரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

- அப்துல்சலாம், ராயல் ஹமீது.

Comments