கொரோனாவிற்கு பலியான மிஸ்டர் இந்தியா ஆணழகர்கள்!! அதிர்ந்துபோன ஆண் அழகு சங்கம்!!

   -MMH

இந்தியாவில் பரவிவரும் கொரோனா  இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அடுத்தடுத்த மூன்று தலை சிறந்த ஆண் அழகர்களை இழந்து உள்ளது இந்திய ஆணழகன் சங்கம்.

பொதுவா ஆணழகன் என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல சிறுவயதிலிருந்தே தனது உடற்கட்டை அமைப்பதற்கு பல நாட்கள் பயிற்சி எடுப்பது மட்டுமன்று தனக்கு பிடித்தமான உணவை உட்கொள்ள முடியாமல் தண்ணீர் குடிக்க முடியாமல் வாடி வதங்கி தன்னுடலை கட்டுடலாக காண்பிப்பதற்கு சிறுக சிறுக மெருகேற்றி பல மேடைகளைக் கடந்து பல தோல்விகளைக் கடந்து உள்ளூர் போட்டிகளில் ஆரம்பித்து.

மாவட்டம் மாநிலம் அகில இந்திய அளவில் தடம் பதித்து பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் நாயகனாகவும் நிற்பதற்கு பல தியாகங்களை செய்து தன்னை தானே செதுக்கியமூன்று மாபெரும் ஆணழகர்கள் தற்போது கொரோனவால்    பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது என்ற செய்தி ஒட்டுமொத்த இந்திய உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வீரர்களையும் உலுக்கியுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்ற ஆண் அழகன்களை நாம் இழந்து வாடிக் கொண்டிருக்கிறோம். அன்னார் களின் குடும்பத்திற்கும் அவருக்கும் ஆழ்ந்த இரங்கலை இந்திய ஆணழகன் சங்கங்கள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகிறது. 

இதில் இரண்டு பேர் சிறு வயதாக இருப்பதாலும் சிறு வயதிலேயே கொரோனாவுக்கு பலியானதால் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது இந்தியா ஆணழகன் சங்கம். இந்த மூவரும் ஏழு முறை இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மிஸ்டர் இந்தியர் என்ற பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ரைட் ரபீக், ஈசா.

Comments