முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கவிதாயினி அமுதா பொற்கொடி வாழ்த்து கவிதை !!
(தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அரியணை இழந்த தி.மு.க, தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள இந்த இக்கட்டான சூழலில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் சுழன்று பணியாற்றி வருகின்றனர். இதனால் முதல்வருக்கு வாழ்த்தும் பாராட்டும் குவிந்து வருகிறது. இதோ ...நெல்லை கவிதாயினியின் கவி வாக்கு)
தலைவா.....!
முண்டி மூச்சரைக்கும் பிரச்சனைக்கள் சூழ
முள் கிரீடம் அணிந்த முனைகூர் அரியணையில்
முதிர்ந்த வேந்தனாய் சிலுவை பல சுமந்து
முடிசூடி கடமையாற்ற அமர்ந்துள்ளீர்....
பக்கத் துணையாக பண்பட்ட மூதறிஞர்கள்
படை பரிவாரங்களாய் துடிப்பான காவலர்கள்
பழுதற்றுப் பணி செய்ய
நியாய அதிகாரிகள்
தோள் கொடுத்து துணை நிற்க வரிசையில் நாங்கள்....
பக்குவமாய் வழி நடத்த செங்கோல் ஏந்தி நீர்.....
மதம்கொண்ட வேழமாய் துன்பங்கள் தொடர்ந்தாலும்...
சதம்கொண்டு இப்படை தகிர்த்தெறிந்து கொல்லும்...
சாதகப் பாதையில் தமிழகம் இனிசெல்லும்...
மேதகு மக்களின் நெஞ்சத்தை இது வெல்லும் !
-தொகுப்பு - கோவை கவிஞர் ஆர்.கே.பூபதி.
Comments