தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர் நியமணம்!!
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய அரசில் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தார். அதிமுக ஆட்சி தேர்தலில் தோற்றுப் போனதை அடுத்து தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விஜய் நாராயண் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து திமுக சட்டத்துறை தலைவராக பதவி வகித்த மாநிலங்களவை முன்னாள் எம்.பி சண்முகசுந்தரம், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எந்தவொரு விவகாரத்திலும் தலைமை வழக்கறிஞரிடம் சட்டரீதியாக ஆலோசனை கலந்த பிறகே மாநில அரசு முடிவுகளை எடுக்கும்.
2002 முதல் 2008ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றிய சண்முகசுந்தரம், 1996 முதல் 2001 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.
Comments