நீடாமங்கலம் வர்த்தக சங்கத்தின் அதிரடி முடிவுகள்!!
மன்னார்குடி பேரூராட்சி அலுவலர், காவல்துறை ஆய்வாளர், வட்டாட்சியர் இவர்களுடைய ஆலோசனை பெற்ற பிறகு நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் திரு பி ஜி ஆர் ராஜாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள வேண்டுகோள். நீடாமங்கலம் பகுதிகளில் கொரோனா பெருந்தொற்றை ஒடுக்குவதற்கு தமிழகஅரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு வணிகர்கள் ஆதரவு அளிக்க கடமைப்பட்டுள்ளார்கள். மே 10ஆம் தேதி முதல் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கடைபிடிப்பது குறித்து பல்வேறு சந்தேகங்களும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி நீடாமங்கலம் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, மீன் , இறைச்சி கடைகளும் மதியம் 12 மணியோடு தங்கள் சேவையை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை. கட்டிட கட்டுமான பொருட்களுக்கான தேவை பொருட்களை இன்று வாங்கி வைத்துக்கொண்டு பணிகளை இயன்றளவு முடிப்பதற்கு தடைகள் ஏதும் இல்லை. பேக்கரி கடைகளை பொருத்தவரை பிஸ்கட்டுகள் மட்டும் பிரட் மட்டுமே விற்பதற்கான அனுமதி உண்டு மற்ற இனிப்பு பதார்த்தங்கள் கேக் வகைகள் விற்பதற்கு அனுமதி இல்லை. அத்தியாவசிய சேவை பணிக்கு வரக்கூடிய வர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து இன்று மாலை 6 மணி அளவில் நடைபெறும் அரசு அலுவலர்களுடன் கூடிய கூட்டத்தில் முடிவு செய்து அனைத்து வர்த்தகர்களுக்கும் அறிவுரைகள் வர்த்தகசங்கத்தால் வழங்கப்படும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வணிகர்களும் பொதுமக்களும் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திருமலைக்குமார், ரைட் ரபீக்.
Comments