தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ சப்ளையின் பற்றாக்குறை நெருக்கடி உண்மை.. ராகுல் காந்தி!!!!

 -MMH

நாட்டில் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ சப்ளையின் பற்றாக்குறை நெருக்கடி உண்மையானது என ராகுல் காந்தி தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் 2வது அலை தீவிரமாக உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி விட்டது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. 

ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதேசமயம் தேவையை காட்டிலும் உற்பத்தி மற்றும் சப்ளை குறைவாக உள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் பல மருத்துவனைகளில் குறிப்பாக டெல்லி மருத்துவமனைகளில் பல உயிர்கள் பலியாகின்றன. தற்போது தடுப்பூசிக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் 44 வயது வரையிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பல மாநிலங்களில் திட்டமிட்டப்படி நேற்று தொடங்கவில்லை.

நாட்டில் தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிடவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ராகுல காந்தி டிவிட்டரில், 3வது கட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்தியை பதிவேற்றம் செய்து இருந்தார். மேலும், பிரதமர் இமேஜ் போலல்லாமல், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ சப்ளையின் பற்றாக்குறை நெருக்கடி உண்மையானது என பதிவு செய்துள்ளார்.

நாளையவரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments