பாதியில் நின்ற ஆக்சிஜன் லாரியை களத்தில் இறங்கி மாஸ் காட்டிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்..!!

 

-MMH

             கொரோனவல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை  தேவைக்கு தஞ்சாவூரிலிருந்து  ஆக்சிசன் நிரப்பப்பட்ட முழு டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது திடீரென்று திருவாரூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென்று பழுதாகி நின்று விட்டது.

அப்பொழுது  எதார்த்தமாக அந்த வழியாக வந்த திருவாரூர் மாவட்ட திமுக தலைவரும் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு பூண்டி கலைவாணன் அவர்கள் ஆக்சிசன் லாரியை கண்டு தனது வாகனத்தை நிறுத்தி அந்த லாரி ஓட்டுநர் இடம் விசாரித்தார். பின்னர் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர் மேலும் லாரியின் பழுதை சரிபார்த்து அதனை உடனடியாக புறப்பட வைக்க வேண்டிய பணியில் அனைவரும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் நேரம் அதிகமாக சென்று கொண்டிருந்த சூழ்நிலையில் அப்பொழுது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு பூண்டி கலைவாணன் அவர்கள் எதிர் திசையில் இருந்து வந்த வேறு ஒரு லாரியை மறைத்து நிறுத்தி அதில் இருந்த பேட்டரியை எடுத்து ஆக்சிஜன் நிரப்பி வந்த டேங்கர் லாரியில் பொருத்தி இயக்கச் செய்து அதை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தமிழகத்தில் அமைந்துள்ள திமுக தலைமையிலான புதிய ஆட்சியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அமைச்சர் பெருமக்களும் பல்வேறு களப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மக்களின் பாராட்டுகளைப் பெற்று வரும் இந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு ஆக்ஸிஜன் லாரியை அனுப்பு அனுப்பி வைத்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு பூண்டி கலைவாணன் அவர்களுக்கு அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் பாராட்டுகள் தெரிவித்து வந்துள்ளனர்.

 நாளைய வரலாறு செய்திகளுக்காக

 -ரைட் ரபிக். ஈசா

Comments