வெறும் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியைப் பறி கொடுத்த அதிமுக!!
அதிமுக சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 29 தொகுதிகள் :
தி. நகர் -137; வேளச்சேரி -4,352; திருப்போரூர் -1947;
செய்யூர் -4042; உத்திரமேரூர் -1622; காட்பாடி -746
ஜோலார்பேட்டை -1091; உளுந்தூர்பேட்டை -5256; ராசிபுரம் -1952
திருச்செங்கோடு-2862; தாராபுரம் -1393; அந்தியூர் -1275
ஊட்டி -5348 ; குன்னூர் -4105; திருப்பூர் தெற்கு -4709
அரியலூர் -3234; ஜெயங்கொண்டம் -5452; விருத்தாச்சலம் -862
நெய்வேலி -977; பண்ருட்டி -4697; கடலூர் -5151
மயிலாடுதுறை -2742; பூம்புகார் -3299; திருமயம் -1382
ராஜபாளையம் -3898; சங்கரன்கோவில் -5297; வாசுதேவநல்லூர்-2367
தென்காசி -370; ராதாபுரம் -5925.
மொத்தமாக 86490 வாக்குகள் வித்தியாசத்தில் 29 தொகுதிகள் இழப்பு.
சுமார் 10 ஆயிரம் வாக்குகளுக்கும் கீழான வித்தியாசத்தில் தோல்வியடைந்த தொகுதிகள் 14:
பொன்னேரி -9689; வேலூர் -9181; அணைக்கட்டு -6360
குடியாத்தம் -6901; கலசப்பாக்கம் -9222; விக்கிரவாண்டி -9573
சேலம் வடக்கு -7588; ஈரோடு கிழக்கு -8904; காங்கேயம் -7331
குன்னம் -6329 ; நாகப்பட்டினம் -7238; மதுரை தெற்கு -6515
ஆண்டிப்பட்டி -8538; ஒட்டப்பிடாரம் -8510
மொத்தமாக 111879 வாக்குகள் வித்தியாசத்தில் 14 தொகுதிகள் இழப்பு
மொத்தமாக 29+14=43
75+43=118தொகுதிகள்
86490+111879 =198369 வாக்குகள்.
வெறும் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுக ஆட்சியை தற்போது இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளும் பலகட்டமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முறிந்தது. கூட்டணி சிக்கல் வர கூடாது என்பதற்கு தே.மு.தி.க. பல முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு பக்குவமே இல்லை என கூறினார். 2011ம் ஆண்டு விஜயகாந்த் கூட்டணி அமைந்ததால் தான் பிரச்சாரத்திற்கே செல்வேன் என ஜெயலலிதா கூறினார்.
தே.மு.தி.கவுக்கு 41 தொகுதிகளைக் கொடுத்து பக்குவமாக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றும் பக்குவம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. 10 முதல் 13 தொகுதி தருகிறோம் என்று அ.தி.மு.க. பேசியது. . கடைசியாக 18 தொகுதி ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட் வேண்டும் என்ற நிலையில் தேமுதிக. நின்றது.. அ.தி.மு.க. 13 தொகுதிகளுக்கு மேலே ஒதுக்க முன்வரவில்லை . மேலும், எந்த தொகுதி என்ற தகவலும் இல்லை. கடைசி நிலை வரை தே.மு.தி.க தொடர்ந்து பேசி வந்தது.
ஆனால் அதிமுக செவிசாய்க்கவில்லை அதிமுக மெகா கூட்டணி முறிந்தது. இதனால் தான் கடைசி நேரத்தில் தேமுதிக மற்றும் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தனர். தமிழகத்தைப் பொருத்தவரை பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மற்ற கட்சிகளுக்கு மிகவும் குறைந்த வாக்குகளே கிடைக்கிறது. தேமுதிக கட்சியை பொறுத்தவரை தமிழகத்தில் தனக்கென்று குறைந்தபட்சம் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்கு வங்கியை வைத்திருக்கிறது.
அதிமுக உடன் தேமுதிக கூட்டணி அமைத்து இருந்தால்? இரு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இணைந்து செயல்பட்டு அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு வழி வகுத்து இருப்பார்கள். ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிக அமமுக உடன் கூட்டணி வைத்ததால். தேமுதிக கட்சியின் வாக்குகள் திசை மாறிப்போனது. 2011 ல் அதிமுக ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது தேமுதிக. 2021ல் அதிமுக ஆட்சியை இழந்துக்கும் காரணம் தேமுதிக தான். இந்த உண்மை இரு கட்சிகளுக்கும் புரிந்ததோ? இல்லையோ? திமுக விற்கு புரிந்துள்ளது. ஆகவே தான் அரியணை ஏறும் முன்பே திரு.விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று தேமுதிக தலைமைக்கு நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.
-குமார், ஊத்துக்குளி.
Comments