கொரோனாவை மிஞ்சும் கருப்பு பூஞ்சை நோய் தொற்று.....
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் மக்களை மிரட்டும் விதமாக தமிழகத்தில் கருப்பு பூஞ்சை என்னும் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஆறு பேருக்கு இந்த புதிய தொற்று கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள நிலையில், இந்த கருப்பு பூஞ்சை தொற்று உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மிகக் கொடிய தொற்றாக இருப்பதால் பொதுமக்கள் இன்னும் கூடுதலாக கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறது மேலும் கொரோனா நோய் தொற்று தமிழகத்தை உலுக்கி வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை நோயும் அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார் தமிழக துணை தலைமை நிருபர்.
Comments