போத்தனூர் பகுதியில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உதவும் இளைஞர்கள்!!
கொரோனா பேரிடர் காலத்தில் உணவில்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி புரியும் இளைஞர்கள் கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றும் இறந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தமிழக அரசு கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் தளர்வுகள் கூடிய ஊரடங்கும் முழு ஊரடங்கும் பிறப்பித்த நிலையில், மக்கள் வேலை இழந்து வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு மக்களை வறுமையில் வாட்டி வதைக்கிறது.
இந்த சூழ்நிலையில் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு பகுதியிலுள்ள இளைஞர்கள் முன்வந்து ஒன்றிணைந்து போத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் 200 நபர்களுக்கு மதிய உணவு பொட்டலங்கள் கொடுத்து வருகின்றனர். இதுபோல் ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா பேரிடர் காலத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து உதவிகள் செய்ய முன்வரலாம். இதுபோன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்யவும் நற்பணியில் ஈடுபடவும் முன்வரலாம் என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டுகள் உடன் கூறியுள்ளனர். தொடரபுக்கு:9629164764-- 7845711078
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஆரோக்கியராஜ் ஈசா.
Comments