நிரம்பி வழியும் சாக்கடை நீர் நோய் பரவும் அச்சத்தில் மக்கள்.! கண்டுகொள்ளுமா மாநகராட்சி..!!
கோவை மாவட்டம் உக்கடம் ஜி எம் நகர் 74வது வார்டுபகுதியில் பள்ளி வாசல் அருகில், கடந்த சில நாட்களாகவே அங்குள்ள சாக்கடை நிரம்பி நீர் சாலையில் முழுவதும் பரவி நோய்த்தொற்று ஏற்படும் அளவிற்கு காணப்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றன.
கொரோனா நோய்த்தொற்று பரவல் கோவை மாவட்டத்தில் அதிகமாக காணப்படுவதால் இதுபோன்ற சாக்கடை நீர் சாலைகளில் பரவி நோய்களை ஏற்படுத்துவதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் அங்குள்ள மக்களை பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சாக்கடை நீரை உடனடியாக மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடமும் அந்தப் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அனஸ் ஈசா.
Comments