கொரோனா அச்சம்! கோவை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 86 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் !!

    -MMH

     கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 86 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் காரணத்தால் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவையை தற்காலிகமாக சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

இந்த நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 மார்ச் மாதம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 908 பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில், ஏப்ரல் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 87, 252 பேர் மட்டுமே விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கோவை விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் தற்போது தினமும் ஆறு விமானங்கள் மட்டுமே.

இயக்கப்படுகின்றன. நோய்த் தொற்று பரவல் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால் விமான பயணம் மேற்கொள்ள பயணிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தவிர பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன்.

அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களும் அவற்றை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கையை வெகுவாக குறைந்து உள்ள நிலையில் இந்த மாதம் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும். " இவ்வாறு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments