மாஜி அமைச்சர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு..! அமைச்சரின் கூட்டாளி மீதும் வழக்கு.!!
திருமண ஆசை காட்டி, ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு ஏமாற்றியதாக, நடிகை சாந்தினி அளித்த புகாரில், அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மலேசிய குடியுரிமை பெற்றவர் நடிகை சாந்தினி, 36. சென்னை, பெசன்ட் நகரில் வசித்து வரும் இவர், நாடோடிகள் உள்ளிட்ட, சில படங்களில் நடித்துள்ளார். கடந்த, 28ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இவர் ஒரு புகார் அளித்தார்.
புகாரில் கூறியிருப்பதாவது:
மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழக துாதுவராக பணி புரிந்த போது, 2017ல், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனை, பரணி என்பவர் வழியாக சந்தித்தேன். தொழில் நிமித்தமான, தொடர் சந்திப்பின் போது, மணிகண்டன் திருமண ஆசை காட்டினார்.
நாங்கள், ஐந்து ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார். என்னை பல முறை வலுக்கட்டாயமாக கருகலைப்பு செய்ய வைத்தார். தற்போது, கூலிப்படையை ஏவி, கொலை மிரட்டல் விடுக்கிறார். மணிகண்டன், பரணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, அடையாறு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பரணி ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், காயம் ஏற்படுத்தியது, மிரட்டியது உட்பட ஆறு பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணிகண்டன் மீது ஐபிசி 313, 323, 417, 376, 5069(i ) 67(எ) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அடுத்த கட்டட நடவடிக்கை இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர். அமைச்சரின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையை உஷார்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எந்த நேரத்திலும் அமைச்சர் கைது அகலம் என காவல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்த சில நாட்களில், முன்னாள் அமைச்சர் மீது, நடிகை தெரிவித்துள்ள பாலியல் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-நம்ம ஒற்றன்.
Comments