கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டும் 1000 தாண்டியது...!!
கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்து உள்ளது. கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 3 பேருக்கு மேல் தொற்று பாதிப்பு உள்ள தெருக்கள் தனிமைப்படுத்தப்படுகிறது. 3 பேருக்கு கீழ் பாதிப்பு உள்ள தெருக்களில் சம்பந்தப்பட்ட வீடுகள் மட்டும் அடைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப் படுகிறது. அங்கு தினமும் 3 வேளை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
அதன்படி கோவை மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்து உள்ளது. இதில் கோவை மாநகராட்சியில் மட்டும் 710 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
ஊரக பகுதிகளை பொருத்தவரை மதுக்கரை வட்டாரத்தில் தான் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு மாநகராட்சிக்கு அடுத்தப்படி யாக 72 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments