சாலையில் கொட்டப்பட்ட குப்பை!! வாகன ஓட்டிகளுக்கு இடையூறு..!!
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஆறுபடை நகர் எதிரில் பிரதான சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் அங்கு செல்லும் வாகனங்கள் தடுமாறும் நிலை காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், அந்தப் பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் விபத்து ஏற்படுவதற்ககுள்.
சாலையோரத்தில் கொட்டப்பட்டிருக்கும் இந்தகுப்பையை அகற்றி தரவேண்டும் என்றும், இதனை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-L.குமார், ஈசா.
Comments