பொள்ளாச்சியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி...!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரே நாளில் 33 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில்:
1.நல்லப்பா நகா்
2.குமரன் நகர்
3.ஜோதிநகர்
4.மகாலிங்கபுரம்
உள்பட பல்வேறு பகுதிகளில் 15 பேருக்கு கொரோனா உறுதியானது.
அதுபோன்று டி.கோட்டாம் பட்டியில் கொரேனாா தொற்று உறுதி செய்யப்பட்ட 53 வயது நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில்:
1.ஊஞ்சவேலாம் பட்டியில் ஒருவருக்கும்
2.மாக்கினாம்பட்டி
3.பொன்னே கவுண்டனூர்
4.ஜமீன்ஊத்துக்குளி
5.ஆவல்சின்னாம்பாளையம்,
6.தொழிற்பேட்டை
7.கரட்டுபாளையத்தில் தலா 2 பேருக்கும்,
சேர்த்து13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆனைமலை ஒன்றியத்தில்:
1.மீனாட்சிபுரத்தில் 2 பேருக்கும்
2.ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளத்தில் தலா ஒருவருக்கும் சேர்த்து 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.
பொள்ளாச்சி நகரில் இதுவரைக்கும் 640 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதில் 485 பேர் குணமடைந்து உள்ளனர். 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்து உள்ளனர்.
எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதார துறை அறிவுறுத்துகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments