பிறந்த குழந்தையை கிணற்றில் வீசிய தாய்!! அதிர்ந்தது பழனி!!

    -MMH

பழனி ஆயக்குடி:

              பழனி என்றாலே, பக்திக்கு பெயர்போன ஊராகத்தான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். முருகனின் அருளால் சிறந்து விளங்கும் பழனி இன்று சோகமயமாக காணப்பட்டது.

பழனி அருகே ஆயக்குடியில் திருமணம் ஆகாத பெண் ஒருவர். கர்ப்பமாகிய நிலையில் நேற்று முன் தினம் இரவு அவருக்கு வீட்டிலேயே அந்த பெண்ணின் தம்பி பிரசவம் பார்த்து அந்த குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் தூக்கி எரிந்தான் .

பின்பு காலை அந்த கிணற்று பக்கம் வந்தவர்கள். பார்த்து காவல் துறைக்கு தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் விசாரணை தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திருக்கு மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சிங்கார முத்து, பழனி . ஈசா.

Comments