பொது முடக்கத்தை ஏற்று வீட்டிலேயே இருக்கும் மக்கள்.! அரசுக்கு முழு ஒத்துழைப்பு..!!
கோவை மாவட்டம் வெள்ளலூர் கொரோனா என்னும் கொடிய நோய் உலகையே ஆடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் சென்ற ஆண்டு எண்ணிலடங்கா உயிர்களை பலி வாங்கி வந்த நிலையில் மீண்டும், கொரோனா இரண்டாம் அலை கட்டுப்படுத்த முடியாதநிலையில், மீண்டும் பரவத்தொடங்கியது.அச்சத்தில் மக்கள் உயிர் பீதியடைந்து வந்த நிலையில் டெல்லி உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் மரண ஓலம் கேட்டு வரும் நிலையில் நோயாளிகள் உயிர் வாழ ஆக்சிசன் தட்டுப்பாடு நிலவுகிறது.
மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாமல் நோயாளிகள் ஒருபுறம் தவிக்கும் நிலையும் காணப்படுகிறது தமிழக அரசு, நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே இரவு நேர பொது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் முழு ஊரடங்கு உத்தரவு அரசு பிறப்பித்துள்ளது.
அதனால் கோவை மாவட்டம் முழுவதும் போத்தனூர். வெள்ளலூர் போன்ற பகுதிகளிலும் ஊரடங்கு, கடைபிடிக்கப் பட்டதால்,சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இது போல் ஆரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அனிந்தும், இந்த மிகப்பெரிய நோய் தொற்றிலிருந்து மக்களை மக்களே காத்துக் கொள்வது அரசுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆரோக்கியராஜ், ஈசா.
Comments