ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மக்களாள் பரபரப்பு..!!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 61 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. தூத்துக்குடி மக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர். செந்தில்ராஜ் கூறுகிறார்.
நீண்ட நாட்களாக ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை தலை தூக்கிக் கொண்டு தான் இருக்கிறது ஆலையை திறக்க தூத்துக்குடி மக்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது 13 உயிர்களை பலி வாங்கிய இந்த ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை இன்னும் ஓயவில்லை. தற்காலிகமாக திறக்கப்படும் என அரசு அறிவித்ததை எதிர்த்து மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈசா, வேல்முருகன், தூத்துக்குடி.
Comments