கொத்துக் கொத்தாக பரவும் கொரோனா!! பகீர் தகவல்!!

     -MMH

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 3,500க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை செயலாளர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அக்கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் அத்தியாவசியமற்ற பணிகளுக்கு கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை அமல்படுத்தலாம் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்து முடிந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இன்று மாலைக்குள் கட்டுப்பாடுகள் என்னென்ன? என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள தங்க நகை பட்டறையில் பணியாற்றி வந்த 22 பேருக்கு கொரோனா உறுதியானது. இதைத் தொடர்ந்து, சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வந்து வருபவர்களுக்கு பாதிப்பு உறுதியாகி வந்தது. இவ்வாறு கொத்துக் கொத்தாக கொரோனா பரவுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

-சோலை ஜெய்க்குமார்,  Ln.இந்திராதேவி முருகேசன்.

Comments