கண்ணீர் விடும் தண்ணீர் பழம்..!!
கோவை மாவட்டம் காரமடை மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆகிய பகுதிகளில் விவசாயம் தொழில் பிரதானமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சின்னட்டியுர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, ஆதிமதியனூர், கண்டியூர் மத்தம்பாளையம் சிறுமுகை ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கோடை காலத்தை ஒட்டி தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர்.
ஆனால் கொரோனா நோய்த்தொற்று பரவுதல் காரணமாக தர்பூசணி பழங்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறாததால் தற்போது விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சின்னட்டியுர் இப்பகுதியை சேர்ந்த தர்பூசணி விவசாயி பிரகாஷ் கூறியதாவது: "கோடை காலத்தை ஒட்டி கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பே தர்பூசணி விளைவிக்கும் பணியை துவங்கி பணிகள் மேற்கண்டனர். பின்னர் தற்போது அந்த தர்பூசணிகள் முழுவதும் தயாராக உள்ள நிலைமையில் அந்த தர்பூசணிப் பழங்கள் தற்போது உரிய விலை இல்லாத நிலையில் கொள்முதல் செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தினால் செடியிலேயே தர்பூசணி பழங்கள் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
ஒருசிலர் கொள்முதல் செய்ய வந்தாலும் குறைந்த விலைக்கு கேட்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தர்பூசணி பழங்கள் கொள்முதல் செய்ய கிலோவுக்கு 20 ரூபாய் இந்த நிலையில் தற்போது அது 6 ரூபாய்க்கு மட்டுமே கேட்பதாகவும் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகளிடம் விவசாயிகள் கேட்டபோது, கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் இரவு நேரம் முழு முடக்கம், ஞாயிற்றுக்கிழமைகளில் தோறும் முழு ஊரடங்கு இருப்பதனால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் முன்வருவதில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள். தமிழக அரசு தர்பூசணி களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்."என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அணஸ், V. ஹரிகிருஷ்ணன்.
Comments