திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மரணம் !!

     -MMH

இயக்குனர் கே.வி.ஆனந்த்த அயன், கோ, மாற்றான், கவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். 54 வயதான கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநரானவர். இயக்குனர் கே.வி.ஆனந்த் மாடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி தொடர்பாளர் ரியாஸ் கே அகமது தகவல் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.வி.1994-ல் மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதை பெற்றார். அதை தொடர்ந்து தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவளராக பணியாற்றி உள்ளார். இயக்குனர் ஷங்கரின் அபிமான ஒளிப்பதிவளராகவும் கே.வி.ஆனந்த் இருந்துள்ளார். ஷங்கரின் முதல்வர், பாய்ஸ் மற்றும் சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவளராக இருந்துள்ளார்.

இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பீர் முகமது.

Comments