இறைச்சி கடைகளில் அலை மோதும் கூட்டம்!! கொரோனா பரவும் அபாயம்!!

   -MMH

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொற்றை கட்டுப்படுத்தும்விதமாக இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் அரசு அறிவித்தது.     

அதன்படி நாளை மறுநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் நாளையும் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை காசிமேட்டில் இன்று அதிக அளவில் மீன் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். அதே சமயம் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியின்றியும் குவிந்ததால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது.

-கார்த்திக், தண்டையார்பேட்டை.

Comments