மேற்கு வங்கம் முதல் தமிழ்நாடு வரை எந்த மாநிலத்தில் யாருக்கு வெற்றி!!
5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்துள்ள நிலையில் பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் கருத்து கணிப்பு நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்கான 8ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது மொத்தமாக தமிழகம் 234; அஸ்ஸாம் 126; கேரளா 140; புதுவை 30; மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே 2ம் தேதி 5 மாநிலங்களுக்குமான சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.இதையடுத்து இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்:
1.ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு ,சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பு
திமுக 160-170; அதிமுக 58-68; இதர 4-6 2.
ஏபிபி- சிவோட்டர் கருத்து கணிப்பு:
திமுக 166; அதிமுக 64; அமமுக- 1 ; இதர 2 மநீம-1
புதுச்சேரிபுதுச்சேரியில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம் :
1. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு :
என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களைக் கைப்பற்றும், காங். கூட்டணிக்கு 11 - 13 இடங்கள் கிடைக்கும்
அசாம்அசாமில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம்:
பாஜக 75- 85; காங்கிரஸ் 40-50; இதர 1-4
மேற்கு வங்கம்மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம் :
1. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு
திரிணாமுல் காங்+ 128-138 இடங்கள்; பாஜக + 138-148 இடங்கள், இடதுசாரிகள்+ 11-21 இடங்கள் பெறும்.
2. டைம்ஸ் நவ்- சி வோட்டர்:
மேற்கு வங்கம்- திரிணாமுல் 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2
கேரளாகேரளாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவரம் :
1. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு :
இடதுசாரிகள் (எல்டிஎப்) கூட்டணி + : 72-80 இடங்கள், காங்கிரஸ் (யுடிஎப்) கூட்டணி: 58-64 இடங்கள், பாஜக + : 1-5 இடங்கள் பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.
Comments