வால்பாறை முடீஸ் பகுதியில் குப்பைகளை அகற்ற மக்கள் கோரிக்கை!!

   -MMH

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியில் பிளாஸ்டிக் க்கு மட்டும் மக்காத குப்பைகளை கொட்டி மாசுபடுத்தி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன தமிழ்நாட்டின் எட்டாவது அதிசயம் என்று அழைக்கப்படும் வால்பாறை பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள சமூக ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள்.

ஆனால் குப்பைகளை இங்கு கொட்டுவதால், அதிக மாசு படிந்து இயற்கை வளம் அழியும் நிலையும் காணப்படுகிறது. தேயிலை தொழில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வால்பாறை முடீஸ் பகுதி சுற்றம் இல்லாமல்,  இருப்பது மனதுக்கு வேதனை அளிப்பதாகவும் இதனை கருத்தில் கொண்டு நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள் முடீஸ் பகுதியில் வாரத்திற்கு இரண்டு முறையாவது அங்கு வந்து குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வால்பாறை பகுதியை சுற்றம் உள்ள பகுதியாக எழில் பொங்கும் 8-வது அதிசயமாக  வைத்துக்கொள்ள வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-செந்தில், ஈசா.

Comments