தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்!!
தமிழகப் பகுதியில் இருந்து நாள்தோறும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பெரிய பள்ளிவாசல் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 3 பேர் ஒரு டெம்போ வேனில் ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து 4. 1/2 ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆனைமலை காந்திநகர் தெருவைச் சேர்ந்த ரபிக் (39),பொள்ளாச்சி கண்ணப்பன் நகரைச் சேர்ந்த முகமது ரபிக் (29),மற்றும் அரசு பஸ் கண்டக்டர் ஆன ஆனைமலை பகி புல்லா(44) என்பது தெரியவந்தது.
விசாரணையில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தவுடன் டெம்போ வேன் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் பின்பு பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-S.சசிகலா,ஆனைமலை.
Comments