சாலையில் தோண்டிய குழியை மூடக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!!
கோவை மாவட்டம் வெள்ளலூர் ஊரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில், சக்தி விநாயகர் நகர் ஆர்ச் எதிரில் குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு. அந்தக் குழியை மூடாமல் வெள்ளலூர் பேரூராட்சி மெத்தனமாக உள்ளது.
அந்தக் குழியானது சாலையின் ஓரத்தில் இருப்பதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது அதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளாகின்றனர்.
இதனை கவனத்தில் கொண்டு வெள்ளலூர் பேரூராட்சி நிர்வாகம் மூடப்படாத அந்த குழியை விபத்து நடைபெறுவதற்கு ள் உடனடியாக மூடி தர வேண்டும் என்றுவாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-எல்.குமார், ஈசா.
Comments