கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விதிமுறைகளை ஆட்டோவில் விழிப்புணர்வு!!
கோவை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள சூழலில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த பொள்ளாச்சி ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக நோய்த்தொற்று தடுப்பு விதிமுறைகளை ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டிக்கொண்டு வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
ஒலிபெருக்கியில் கூறப்படுவது என்னவென்றால் பொதுமக்கள் அத்தியாவசிய காரணமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும், அனைவரும் வீட்டை விட்டு வெளியே வருகின்ற பொழுது முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், பொது இடங்கள் மற்றும் கடைகளுக்கு செல்கின்ற பொழுது கட்டாயம் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கப்பட வேண்டும்,
பொது இடங்களில் எச்சில் துப்புவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் மேற்கண்டபடி கடைப்பிடிக்க தவறும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் மேலும் குற்றத்துக்கு தகுந்தபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக தொடர் ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-S.சசிகலா, ஆனைமலை.
Comments