கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து மது வாங்கும் மது பிரியர்கள்!!

  -MMH

கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த கேரளா அரசு சில தினங்களுக்கு முன்பு மதுபான கடைகளை மாநிலம் முழுவதும்  அடைத்தது. இதனால் அம்மாநில மதுப் பிரியர்கள் மதுபானம் கிடைக்காமல் தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மீனாட்சிபுரம் டாஸ்மார்க் கடையில் மதுபானம் வாங்க மதுப் பிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை முற்றிலும் மறந்து முட்டி மோதிக்கொண்டு மதுபானம் வாங்கிச் சென்றனர்.


இடைவிடாத கூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு இல்லாமல் அளவுக்கதிகமான கூட்டம் இருப்பதை டாஸ்மார்க் நிர்வாகம் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல்  இருப்பதைக் கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வருத்தம் அடைகின்றனர்.

மேலும் மீனாட்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மது பிரியர்களின் குடும்பங்கள்  புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் நம் வீட்டில் உள்ள ஒருவரும் இருப்பாரோ என்று அச்சம் அடைந்துள்ளனர்.

-M.சுரேஷ்குமார்.

Comments