கொரோனா காரணமாக நிரம்பியது ஹிந்துஸ்தான் மருத்துவமனை!!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் ஹிந்துஸ்தான் மருத்துவமனை நோக்கி வருவதால் நிரம்பும் தருவாயில் மருத்துவமனை உள்ளது. காரமடை மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் கொரோனா உறுதி செய்பவர்களை கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவர்.
அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்பவர்களை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை அருகே வேளாங்கண்ணி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் நேற்றைய தினம் 32 பேர் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த மருத்துவமனையில் சுமார் 50ஆண்கள் மற்றும் 26 பெண்கள் தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் அந்த மருத்துவமனையில் மொத்தமாக 80 படுக்கைகள் உள்ளது.
தற்போது 76பேர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய தினம் காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் இந்துஸ்தான் மருத்துவமனை நிரம்பியது.
இனிவரும் நோய்த்தொற்று உள்ளவர்களை தனிமைப் படுத்துவதற்காக கடந்த ஆண்டைப் போல நஞ்சை லிங்கம்மாள், பாலிடெக்னிக், உள்ளிட்ட தனியார் கல்லூரிகளை கொரோனா தடுப்பு மையமாக மாற்றி போதிய மருத்துவர்கள் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.
Comments