கரடி இருப்பிடமாக மாறிய கழிப்பிடம் மக்கள் அதிர்ச்சி!!
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் பொதுக்கழிப்பிடம் ஒரு வருடமுன்பாக கட்டப்பட்டுள்ளது எனவும் அந்த கழிப்பிடத்தில் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாகவும்.
அதில் தண்ணீர் வருவதில்லை சுற்றிலும் சேதம் அதிகமாக உள்ளதென இதில் பாம்புகள் பல்லிகள் மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது தங்களுக்கு இடமாக மாற்றிக்கொண்டு உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உடனடியாக இதை கவனத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம். இதைச்சுற்றியுள்ள புதர்களையும் சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-செந்தில், ஈசா.
Comments