தேவகோட்டையில் பனைமரத்திலிருந்து விழுந்து இளைஞர் பலி!!
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை முகமதியர் பட்டணத்தில் உள்ள, இம்ரான்நகரைச் சேர்ந்தவர் அஜ்மீர் (33). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு கடந்த 15 தினங்களுக்கு முன்புதான் தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு வந்திருக்கிறார்.
இவர் நேற்று, கண்ணன்கோட்டை பகுதியிலுள்ள ஒரு பனை மரத்தில் நொங்கு வெட்டுவதற்காக ஏறிய பொழுது, உச்சியில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தேவகோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்து 15 நாட்களே ஆன நிலையில், அஜ்மீர் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரையும், அப்பகுதியைச் சேர்ந்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
- சங்கர், தேவகோட்டை.
Comments