4 மாத குழந்தைக்கு மூளையில் கட்டி அகற்றி கோவை அரசு மருத்துவர்கள் வெற்றி...!!
பிறந்து நான்கு மாதமே ஆன குழந்தைக்கு, மூளையில் இருந்த கட்டியை, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
கோவையை அடுத்த பேரூரில் உள்ள, ஒரு குழந்தைகள் காப்பகத்தில், பிறந்து நான்கு மாதமே ஆன பெண் குழந்தைக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தை கடந்த, 20ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். பச்சிளங் குழந்தைகள் சிகிச்சை மையத்தில், அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், குழந்தையின் மூளையில் கட்டி இருப்பதை, டாக்டர்கள் கண்டறிந்தனர்.
மூளை நரம்பியல் டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்றினர். தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில், குழந்தையின் உடல் நலம் தேறியது. முற்றிலும் குணமடைந்த அக்குழந்தையை, மருத்துவமனை டீன் (முதல்வர்) நிர்மலா, காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
நான்கு மாத குழந்தையின் கட்டியை அகற்றி அறுவை சிகிச்சை செய்த கோவை அரசு மருத்துவமனைக்கும் மருத்துவர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-அணஸ், V.ஹரிகிருஷ்ணன்.
Comments