தூத்துக்குடியில் 13 பேர் பலியை மறக்கவும் மன்னிக்கவும் முடியாமல் ஆட்சியரிடம் மக்கள் மனு!!
தூத்துக்குடி மாவட்டம்:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலரை மட்டும் ஆட்சியர் செந்தில்குமார் அவர்களிடம் மனு கொடுக்க அனுமதித்தனர்.
ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றவர்கள். எங்கள் உறவினர்களை போலிசார் நடத்திய தடியடி துப்பாக்கி சூடு நடத்தியதால் 13 பேர் பலியாகி பலர் காயம் அடைந்து உள்ளனர். அதை எங்களால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்று கூறி கனத்த இதயத்துடன் மனு கொடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், ஈசா.
Comments