சிங்கம்புணரியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 136 பேர் பயன் பெற்றனர்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுந்தரம் நகர், மக்கள் மன்றத்தில் பிரான்மலை வட்டார மருத்துவர் நபீஷாபானு தலைமையிலும், சிங்கம்புணரி அரிமா சங்க தலைவர் செல்வக்குமார் மற்றும் செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை மற்றும் அரிமா சங்கம் இணைந்து நடத்திய இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மருத்துவர்கள் செந்திகுமார் மற்றும் பரணிராஜன், சுகாதார ஆய்வாளர்கள் மதிஅரசு, எழில்மாறன், முஹமது பாஹிர் மற்றும் கிராம சுகாதார செவிலியர் சாந்தி, சுஜாதா மற்றும் பகுதி நேர சுகாதார செவிலியர் நளினி மற்றும் பிரான்மலை சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 45 வயது பூர்த்தியான ஆண்கள் மற்றும் பெண்கள் 136 பேருக்கு கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments