சிங்கம்புணரி எஸ்எஸ்ஏ கல்லூரியில் Take of to Take Off கருத்தரங்கம்! மாணவர்கள் பயன்பெற்றனர்!
சிங்கம்புணரி அருகே தெக்கூர் SSA கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகம் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை சார்பாக 'Take of to Take off" எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மனிதவள ஆலோசனை குழுமத்தின் கோகுல் (HR Consulting, Chennai) மற்றும் கோபாலன் (Managing Director, Unilmas Technology, Chennai) அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே மனித வள மேம்பாட்டுத் துறையின் சிறப்பம்சங்கள் மற்றும் அவை சம்பந்தப்பட்ட தகவல்களையும் எடுத்துரைத்தனர்.
மேலும் மாணவர்களின் சந்தேகங்களும் பதில் அளித்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவர் ஜபருல்லா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் ஹேமாமாலினி துவக்கயுரையாற்றினார்.
இறுதியில் வணிக நிர்வாகவியல் துறையைச் சேர்ந்த மாணவி பானு நன்றியுரையாற்றினார். இக்கருத்தரங்கினை வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறப்புற ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி மிகப் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ந்தனர்.
-அப்துல்சலாம், திருப்பத்தூர்.
Comments