இன்று முதல் வெள்ளியங்கிரி செல்ல வனத்துறை அனுமதி!!

 

-MMH 

              கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் சிவலிங்கம் உள்ளது அங்கு சென்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு  இன்று முதல் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக, தடை விதிக்கப்பட்டது . நடப்பு ஆண்டிலும் தடை நீட்டிக்கப்பட்ட தால் .மலையேற்றத்துக்கு அனுமதிக்க, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. 

இதுகுறித்து, கடந்த, 18ம் தேதி, வனத்துறை ஆலோசனை கூட்டம் நடத்தியது.பூண்டி கோவில் நிர்வாகம் சார்பில், கிரிமலை உண்டியல் உள்ளிட்டவற்றுக்கு, 42.50 லட்சம் ரூபாய்க்கு 'டெண்டர்' விடப்பட்டது. அதையடுத்து, 'மலையேற்றத்துக்கு அனுமதி வழங்கப்படுமா' என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எகிறியது.

இந்நிலையில், நேற்று மாலை, போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், இன்று முதல், பூண்டி மலையேற்றம் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கிரிமலை செல்லும் வழியில், 40 கடைகள் அமைக்க, பழங்குடியினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments