சிங்கம்புணரியில் திமுகவினர் உற்சாகம்! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!
சிங்கம்புணரியில் திமுகவினர் உற்சாகம்! பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!திருப்பத்தூர் திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரியகருப்பன்!
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சியினரும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்ற விடயங்களில் பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடித்த கட்சிகள் அடுத்த கட்டமாக, வேட்பாளர் அறிவிப்பு என்னும் வேலையில் இறங்கியுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று மதியம் திமுக சார்பாக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதில் திருப்பத்தூர் தொகுதிக்கான வேட்பாளராக திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் அறிவிக்கப்பட்டார். கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தொடர்ச்சியாக நான்காவது முறையாக திமுகவின் திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு போட்டியிட்ட மூன்று சட்டமன்ற தேர்தலிலும் வென்றிருக்கிறார். ஐந்து வருடங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டிருக்கிறார்.
இந்த அறிவிப்பு, திருப்பத்தூர் தொகுதியில் உள்ள திமுகவின் அனைத்து அணியினரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. வேட்பாளர் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பாக இருக்கும் அண்ணா சிலையின் முன்பு திமுகவினர் உற்சாகமாக ஒன்றுகூடினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் பூமணி அவர்கள் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.அம்பல முத்து மற்றும் எம்.சோமசுந்தரம், நகரச் செயலாளர் யாகூப், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், ஒன்றிய பொருளாளர் மணப்பட்டி பாஸ்கரன், நகர அவைத்தலைவர் சிவக்குமார், நகர பொருளாளர் கதிர்வேல், முன்னாள் நகர துணைச் செயலாளர் பூமிநாதன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மனோகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கதிர்காமம், முன்னாள் வார்டு கவுன்சிலர் செந்தில் கிருஷ்ணன், அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சிறுபான்மை அணி நிர்வாகிகள் கேபிள் சாதிக் மற்றும் எஸ் எஸ் இப்ராஹிம், தொழிலதிபர்கள் குடோன் சுப்பிரமணி, புகழேந்தி, ஜி.வி.ஜெயக்குமார் மற்றும் ராஜா முகமது, அலாவுதீன் யாகூப், ஆஷிக், அபுதாஹிர் மற்றும் வார்டு செயலாளர்கள், தொண்டர் அணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இதே போன்ற கொண்டாட்ட செய்திகள் திருப்பத்தூர் தொகுதி முழுவதிலும் இருந்து வந்த வண்ணம் இருக்கிறது.
- ராயல் ஹமீது மற்றும் அப்துல்சலாம்.
Comments