புதிய திருப்பம்! அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிவிப்பு!

 

-MMH

        ரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும். என்மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

-சோலை. ஜெய்க்குமார்,  சேலம்.

Comments