சூயஸ் கால்வாயில் சிக்கித் தவித்திருந்த எவர்கிரீன் சரக்கு கப்பல் மீண்டும் கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளதால் உலக நாடுகள் மகிழ்ச்சி!!

 

-MMH

    த்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் 163கி.மீ நீளம் கொண்ட சூயஸ் கால்வாயில் ஏறத்தாழ ஒரு வாரக்காலமாக சிக்கித் தவித்திருந்த மிகப்பெரிய சரக்கு கப்பலும் 400 மீட்டர் நீளமான "எவர்கிரீன்" நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு தற்போது மீண்டும் நீரில் மிதக்கத் தொடங்கியுள்ளது. சராசரியாக 300மீட்டர் அகலம் கொண்ட இந்த கால்வாயில்தான் உலகின் 12 சதவிகித வர்த்தகம் நிகழ்கின்றது , குறிப்பாக கச்சா எண்ணெய் முதற்கொண்டு உதிரிபாகங்கள் வரை இக்கால்வாய் வழியாகவே பரிமாற்றபடுகின்றது .

கடந்த ஒர் வாரத்திற்கு முன்பு எவர்கிரீன் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் மணல் புயலால் திசைத்திரும்பி  கால்வாயின் மணலில் சிக்கிக்கொண்டது. இந்நிலையில் உலகின் பரபரப்பான இந்த நீர் வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு , பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்தது , இதனைத் தொடர்ந்து தரை தட்டிய கப்பலை மீட்கும் பணியானது ஒருவார காலமாக  இரவு - பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணியளவில் கப்பல் மீட்கப்பட்டு பயணமாகியது. விபத்தினால் காத்துக்கொண்டிருந்த 396க்கும் மேற்பட்ட கப்பல்களும்  இந்த கால்வாயில் பயணிக்க துவங்கியுள்ளது .

Comments