தொகுதி மாறி போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்!!

     -MMH
     2011 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி இந்த முறை சைதாப்பேட்டையில் போட்டியிடுகிறார். கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட ராஜேந்திரபாலாஜி இந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா தற்போது திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவதற்கு முன்பே நட்சத்திர வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இரண்டாம் கட்டமாக 171 வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்து வெளியிட்டனர். தற்போது அமைச்சராக இருக்கும் இரண்டு விஜயபாஸ்கருக்கும் அதே தொகுதிகளில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஆவடியில் பாண்டியராஜனுக்கும், மதுரவாயிலில் பென்ஜமினுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, கருப்பணன், வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், க. பாண்டியராஜன், வேலுமணி ஆகியோருக்கு அவரவர் தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன.


அமைச்சர் ராஜ லெட்சுமிக்கு சங்கரன் கோவில், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு தூத்துக்குடி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சாத்தூர், அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு திருமங்கலம், அமைச்சர் செல்லூர் ராஜூக்கு மதுரை மேற்கு, அமைச்சர் காமராஜ்க்கு நன்னிலம், அமைச்சர் ஓ. எஸ். மணியனுக்கு வேதாரண்யம், அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கு கடலூர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு திண்டுக்கல், அமைச்சர் சரோஜாவுக்கு ராசிபுரம், அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ஆரணியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பாஸ்கர், நிலோஃபர் கபில் மற்றும் வளர்மதி ஆகிய 3 அமைச்சர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை

இதில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, கடந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், இந்த முறை ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார். 2011ல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட சைதை துரைசாமி இந்த முறை சைதாப்பேட்டையில் போட்டியிடுகிறார். மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப்,தொண்டாமுத்தூர். 

Comments