அதிமுக கூட்டணியில் பாமக தொகுதிப் பட்டியல் வெளியீடு !!

     -MMH

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையி அதிமுக தலைமை இன்று தங்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. அதன் விவரங்கள் பின்வறுமாறு:

செஞ்சி, மைலம்,ஜெயம் கொண்டான், திருப்போருர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னத்தூர், மேட்டூர்,சேலம், சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்,- திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேலூர், ஆத்தூர் போன்ற தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

-சோலை ஜெய்க்குமார், சேலம்.

Comments